Wednesday, June 29, 2011

ஓசை ஆசை

அவர் தான் சமீபத்தில் தங்கி வந்த ரிசாட்டை பற்றி எங்கள் ஊர்(மஞ்சை) திரு விழாவின்போது தன் நண்பரிடம் பிரஸ்தாபித்துக்ககொண்டிருந்தார்
ஜீவா
. வெளி உலகத்தொடர்பே மிக அரிதாக இருக்கும் அந்த இடத்தின் தன்மை,அதன் சூழ் நிலை தன்னை போன்றவர்களுக்கு கொடுக்கும்  Relaxation பற்றியும் கூறினார்.
                அந்த N R V (non resident villager)  நண்பரிடம் தன் காமிரா அலைபேசியை கொடுத்து அதில் படம் எடுக்க முயலச்சொல்ல அவரும் முயன்றுகொண்டிருந்தார். இவர் அங்கே டிவி கிடையாது,போன் கிடையாது,  நெட் கிட் எதுவும்  கிடையாது என சொல்ல அருகில்  நின்ற  நான் அட நம்ம ஊரில் நம்ம வீட்டில் இருப்பதை போல இருந்திருக்கும்  என  நினைத்துக்கொண்டேன்.  அவர் தன்  அலைபேசியில் கோவிலுக்கு வெளியே  நின்று பேசிய போது "பிலிம்" காட்டுவதாகக் கூட நினைத்தேன். ஆனால் அடுத்த ஆண்டு  திருவிழாவின் போது கடை நிலை சேவார்த்தி கூட கடவுளை தன் கைபேசியில் அடைக்க முயலுவது  எங்கும் காணக்கிடைத்தது ஓர் ஆண்டில் என்ன  அசுரத்தனமான மாற்றம் அல்லது வளர்சிதை மாற்றம்.
             இந்த வேகம்தான் ஓசை,அல்லோசை(  நல்லோசையில்லா)யின் தாக்கத்தை பற்றி நம்மை கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.                     ஒலி மாசுபாடும்  ஓர் முக்கிய பிரச்சனை! ஆமால்ல. 
          வீட்டில் ஃபேன் சத்தம்,24 மணி நேரத்தில் குறைந்தது10மணிநேரமாவது  ஒளி ஒலிரும் தொலைகாட்சி, நகரமாக இருந்தால்  சக பெட்டியின் (நெருக்கத்திலிருக்கும்) ஒலிக்கூட்டமைப்பு(union or association),தெருவில் இருந்து வரும் மோட்டார் வாகன துறிதகதியோசை இடைக்கிடைக்கேட்கும் அதன் காற்று ஒலிப்பான்(high light-டாக),பக்கத்து வீட்டுக்காரரின் கட்டிடக்கலை ஆர்வத்தின் விளைவாக பால்கனி குட்டிசுவர் திருத்திஅமைக்க(இருப்பதை உடைக்க)  பயன்படுத்தும் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்யோசை  எந்திரம்,காய் வண்டிக்காரர் முதல் காரில் செல்வோர்வரை தங்கள் இசையார்வத்தை தனித்துக்கொள்ள tuneசெய்திருக்கும்  பன்(பன்பற்ற)பலை ஒலிபரப்பி,பகல் இரவு பாராமல் பேருந்தில் வீடியோ காட்சி அது தீர்ந்தால்(கோளாறு காரணமாக) தொடரும் ஆடியோ  நீட்சி,முடிந்ததும் அருகில்   இருப்பவரின்  அஞ்சு ஸ்பிக்கர் அலைபேசி(சீன)யின் அம்மன் பாடல், திரைக்கொட்டகைக்கு சென்றால் அதன் நாற்றட இசைப்பெருக்கி(மேலதிக இடங்கலில் தரமற்ற),ஆலயத்திற்கு சென்றால் அதுவும் திருவிழாக்காலமாக இருந்துவிட்டால்  கூட்டதின் கூச்சலை மிஞ்ச வைக்கப்பட்டுல்ல                                                               சவ(ங்கலின்)ப்பெட்டிகளிலிருந்து(ஸ்பிக்கர் பாக்ஸ்) வரும் எக்கோ எபெக்ட் பேரோசை,பிரபல கொவிலென்றால் போகும் வழி நெரி(றி)த்து  நிற்கும் கடைகளிலிருந்து கிளம்பும் திரைப்பபின்னணி பாடகி,கர் களின் பக்தி பாடல் முன்னணியோசை, உள்ளே  அன்றாடபூசையில் இயந்திரமனியின் சலிப்பூட்டுமோசை,கருவறையுள்ளோ எலக்டிரானிக் எந்திரத்தின் மந்திர உச்சாடனம் இவை எல்லாம் சிலஅல்லது பல எடுத்துக்காட்டு.
                  சரி  என்ன செய்ய? ம் அன்னாஹசாரேவா? என்னாஹசாரே அவரைப்போல போராட போறமா இல்ல அதுக்கு துனையா ராம்தேவ்வா? சோம்தேவ்வா அவரு வரத்தாம்போறாரா?                                                                                                                                  சும்மா வாயப்போட்டுமெல்லத்தான்
                                                                                                                        மெல்லுவோம் தொடர்ந்து........
                                                                                    

                                                                            

1 Comments:

At June 29, 2011 at 12:52 AM , Blogger manjaimeigandan said...

புகைப்படம் தோழர் ஜீவா

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home