Wednesday, July 6, 2011

நகரத்திலிருக்கும் நாம் சொந்த கிராமத்திற்கு இல்லாவிட்டால் சொந்தங்களின் கிராமதிற்கு  சென்று வரவிரும்ப வேண்டும் கொஞ்சம் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்,  வித்தியாசமான உணவை சுவைக்கலாம்,சொந்தங்களிடம் பொறணிபேசி பொழுதைக்கழிக்கலாம் இந்த மீடியாக்கலின் பிடியிலிருந்து விடுபட்டதை உணரலாம். டிவி  யே பார்தால்கூட அதன் வித்தியாசம் உங்களுக்கு புரியும் வெளியிலிருந்து சப்தம் வந்தால் கூட(union-அதன் பெயருக்கு முரணாக இருப்பதைபோல சப்தமும் இருக்கும் நகரத்தில்)  ரேடியோ மத்திய அலைகூட      F Mபோலகேட்கும்.(உள் கிராமமாக இருந்தால்)       
   மக்கள் நகரத்தை நோக்கி செல்கின்றனர் என மேலோட்டமாக  இன்று சொல்லப்பட்டாலும் கிரமத்தான்கள் மனதளவில் நகரவாசியாவதற்கே எப்போதும் முயன்றுகொண்ட்டிருக்கிறான் என்பது வேதனை. நமக்குரிய பாரம்பரிய நிகழ்த்து கலை இப்போது மிகக்குறைவு அல்லது இல்லை.இதைப்பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.சிந்திக்கவேண்டும் என்பது நமது ஆசை.
      பெரு நகரங்களில்தான் நல்ல இசை கேட்பதற்கான FMGOLD-போன்ற சேனல்களிருக்கிறது . ஊர் புறங்களில் தான் நகரங்களை விட இதுபோன்ற  சேனல்கள் அவசியம்.  நமது  அரசை இதில் கவனம் கொள்ளவைக்கவேண்டும். நான் சென்னையிலிருந்த  நாட்களில் ஒரு நாள் கூட வானொலியை டியூன் செய்தது இல்லை ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நகழ்ச்சி இருந்துகொண்டே இருக்கும்.வியாபாரரீதியிலான பண்பலைகள் கிராமங்களை சென்றடைவதற்குள்  இது நடக்கவேண்டும் என்பது நமது ஆசை.
   ஆதி கால மனிதன் குகைக்குள் வசித்தான் எதற்கு  இயற்கையின்  அதீத சீற்றத்திற்கு பயந்தோ!! இன்று நாம் குகை போன்ற வசிப்பிடத்தில் இருக்கிறோம்  எதற்கு இயற்கைக்கு ஆதீதமாக பயந்தோ!.
 வெயில்,வெளிச்சம்,காற்று,மழை,இவற்றை மறைத்து பெட்டி போன்ற  இருப்பிடத்தில் வசிக்கிறோம் அளவில் சொல்லவில்லை அமைப்பில். வெளிச்சத்தை மறைத்து பகலிலும் லைட்டை எறியவிட்டு.வெளிக்காற்றை மறைத்து ஃபேனை சுழலவிட்டு உள் காற்றை தேடிக்கொண்டு, வீட்டினுள் குப்பை ,நீர் சுத்தமாக நீக்கி வெளியே தேக்கி அதிலுற்பத்தியாகும் கொசுவிற்கு பயந்து இருக்கும் ஒன்றிரண்டு சன்னல்களிலும் நெட்லான் அடித்து HIT அடித்து BAT எடுத்து கொசுவுடன் டென்னிஸ் விளையாடி Good Night சொல்லி தூங்க போகிறோம். அல்லது AC போட்டு தூங்கி எழுந்து CNN NDTV வைத்து குளோபல் வா(ர்)மிங் கவர் ஸ்டோரி பார்க்கின்றோம்.
     தற்போதய குடியிறுப்பின் அடிப்படை அமைப்பு முக்கால்வாசி இடங்களில்  எதிரொலியுடனே இருக்கும்.பொறியாளரைக் கேளுங்கள் லாப்டில்  சாமான்களைப்போடுங்கள் என்று சமாளிக்க சொல்லுவார். பழைய அமைப்பில்  இது அதிகமில்லை(தெறிந்தோதெறியாமலோ).
          செவ்வியலிசையை கேளுங்கள் பயிற்சி தேவைதான் பரவாயில்லை.புரியாதுதான் புரிவதுபோல் நடியுங்கள்,ஆர்வம் இருக்காதுதான் இருப்பதாக காட்டிக்கொள்ளுங்கள் கொஞ்ச நாட்களில் தேவையான அளவு கிடைத்து விடும் என்ன மினிமல் பொருமை வேண்டும் அதுதான் நம்மிடையே  அறிதான ஒன்று. அது  நம்மிடையே வேண்டுமென்பதொரு ஆசை.
  பேருந்துகளில்  "கலர் வீடியோகோச்" என்பது கூடுதல் ஈர்ப்பாக இருந்தது தற்போது பலருக்கு தவிர்க்க வேண்டிய ஒன்றாக படுகிறது. இந்த"பப்ளிக் பிராட்காஸ்டிங்" சில காலங்களில் ஒழிந்துவிடும்.  ஒவ்வொரு பயனியும் தத்தமது சாதன ங்களில் தத்தமது ரசனைக்குறிய மெட்டீரியல்களை எடுத்து வந்துவிடுவர் குடி நீர்,உணவு போல கையுடன். என்ன ஹட் போன் போன்ற சாதனங்களை(அடுத்தவர்க்கு இடஞ்சலில்லாமல்) உபயோகிக்கவேண்டுமென்பது ஒர் ஆசை.
     இ ந்த ஒலி ஒளி அமைப்பு,  இன்று நடக்கும் ஆர்கெஸ்ட்ராக்களில்   கலைஞ்சர்கள் நல்ல ஒலி அமைப்பு முறை பற்றி தெறிந்திருந்தும் எனோ செய்வார் இல்லை.குளத்திற்கு அருகில் மேடை அமைந்தால் அன்று நிகழ்ச்சியே நன்றாக இருக்கும் என பேசிக்கொள்ளும் சிலரை பார்த்ததுண்டு.
  இன்று டென்ட் கொட்டகை  எப்படியிருக்கிறது தெறியவில்லை காலைத்தூக்கி சீட்டில் வைத்துக்கொண்டு                               (   எப்போதாவதுகீழே ஓடும் நாய்க்காக)படம் பார்த்தாலும்  அதன் காற்றோட்டமும் தெளிவான ஒலியமைப்பும் நன்றாக இருக்கும்.
 ஆடியோவில் எத்தனையோ தொழில் நுட்பங்கள் பல கேட்ஜெட்கள் வெட்ஜெட்கள் ஸ்டீரியோ  டால்பி எம்பிதிரி எம்பிபோர் குச்சிகள் இவையத்தனையும் இயல்பிலிருக்கும் ஒலித்துல்லியத்தைதான் அடைய முயலுகின்றனவென்பதை நாம் உணறவேண்டும்.  கலைஞ்சர்களே கூட அதில் அசட்டையாக  இருப்பதாக தோன்றுகிறது. நாதஸ்வரம்கூட எல்லா இடங்களிலும்  நேரங்களிலும் ஒலிபெருக்கியுடன் இருக்கவேண்டுமா?. அப்படியிருந்தாலும் நம் மாக்கள்(எழுத்துப்பிழையில்லை) பலர் இவர்களினிசயை தங்களின் பிசியான மூளைக்குள்  நுழைத்து   மனதிற்குள் செலுத்திவிடப்போகிறார்களா என்ன. சக கலைஞ்சர்களுடனும் வேலையற்ற(பிசி) சிலருடனும் தானே பகிர்ந்து கொள்கிறீர்கள் எதற்கு அந்த தரமற்ற ஒலிபெருக்கி.
  திருப்பூரில் கிருஷ்னா ஸ்வீட் ஆதரவில் மாதம் ஒருமுறை கச்சேரி நடக்கிறது.அந்த சற்றே பரபரப்பான கோவிலில்  சுமாரான ஒலி அமைப்பில் மேலும்சுமாரான எண்ணிக்கையில் உள்ள ரசிகர்களுக்கு வந்து பாடும் பாடகர்களையும்  நடத்தும்   சபா&ஸ்பான்ஸரை போற்றவேண்டும்.சூழ் நிலைத்தொல்லை,  அங்கு வந்து இருக்கும் சுத்த ஆன்மீகர்களின்(கலைகளில்கூட நாட்டம்காட்டாத) சலசல பேச்சுக்கிடடையே அந்நிகழ்வு ஏன் அங்குதான் நடக்கவேண்டுமா?  ஸ்பான்சர்  ஆன்மிகத்துடன் இணைந்தே நிகழ்ச்சி நடக்க வேண்டுகிறார் சரி  வேறு சிறியகோவிலில் ஏன் நடத்தக்கூடாது ?  ( குறைவாகவே  ரசிகர் வருவதால் மைக் இல்லாமலே கூட).
un adulterated music என்பதே  கிடைக்காதவொன்றாகிவிட்டது கொடுமை என்னவென்றால் இருக்கும் ஒன்றிரண்டு நல்ல அமைப்புகளின் சிறப்பை உணராதிருப்பதுதான். இயந்திர மனிஅமைப்பதில் இருக்கும் பெருமை  கோவில்களில் நாதஸ்வரம் தவில் கலைஞ்சர்களை தக்கவைத்துக்கொள்வதில் இல்லாது போனதுதான். இன்று ஒதுவார்களே இல்லாத பெருமை மிகுகோவில்களெத்தனையோ.
  திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகளை உருவாக்கிய ஊர் கோவிலில்இன்று அர்த்தசாம பூசையின்போது பாருங்கள் (அமெச்சூர்) பாடக பக்தர்கள் அமர்ந்து திருமுறை பாடல்களை இசை!!த்துக்கொண்டிருப்பதை காண்பீர்கள் அவர்கள் பக்தியை குறைத்துக் கூறவில்லை அப்பெருமை மிக்க இடத்தில் கூட அவர்களுக்கு பாரம்பரிய பண் முறை அடிக்கடி காதுகளுக்குள் விழவில்லை அவர்கள் மனதில் பதியுமளவுக்கு அதனால் பாட்டில் பிரதிபலிக்கவில்லை.அருகிலிருந்த அன்பர் அன்புடன் செய்யும் எச்செயலையும் ஆண்டவன் ஏற்றுக்ககொள்வார் என்றார்"கோழை மிடறாக" என்ற திருமுறையைச்சமாதானமாக சொல்லி.
 இயந்திரமனியிசையும் எலக்டிரானிக் மந்திர உச்சாடனமும் அவருக்கு தேவையில்லை  நாம்தான் ஒடிக்கொண்டிருக்கிறோம் இழப்பையறியாது..என்னத்த கன்னையா போல " பெரிய தேசிங்கு ராசா ஒடுராறு திரும்பி வருவாறு" என அந்த தோடுடையசெவியன்(இரு காதிலும் காந்தர்வர்கள் இசைக்க) அமர் ந்திருக்கிறார். திரும்ப வரவேண்டும் என்பதே நமது ஆசை.