மஞ்சையன்
Friday, May 1, 2015
Saturday, December 31, 2011
முதலியார் பெரியவர்
"முதலியார் பையனா நீ " இதை சொல்லியபோது அவருக்கிருந்த முகபாவம் பொடியனாக இருந்த என் நினைவிலிருக்கிறது.இன்றும். ஆச்சரியமா? இல்லை கோபமா?இல்லை ஏளனமா? இல்லை கண்டிப்பா இல்லை? ஆனால் நானேதோ சின்ன தப்பு மட்டும் செஞ்சுட்டேன்னு அந்த"சற்றே முழித்த": பார்வை எனக்கு புரிய வச்சுடுச்சி.
மாட்டு பொங்கலுக்கு சரணம் செய்ய சென்றிருந்த கும்பலின் இடையே இருந்த என்னிடம் தினாமூனா மாமா கேட்ட கேள்வி இது. "பையா யாரு?" என்ற அவரின் கேள்விக்கானபதில் "முத்து முதலியார் "-பையன் இதில் முதலியாரை தவிர்த்திருக்கவேண்டும் ,(கொல்லன் தெருவில் ஊசி) "நாவம்மா பையன்" என என் பதில் இருந்திருக்கவேண்டும். எங்க அப்பா இவரை உறவு முறையில் குறிப்பதைவிட "எங்க மேனேஜர்"- னே எப்போதும் சொல்லுவார் .மதுரை கடையில் அவரிடம் பெற்ற அநுபவம் .லீவு வாங்க சிறமப்படுவது. தாத்தா போட்டோவை வண்ணமயமாக்க சற்று கூடுதலாக செலவு செய்து கண்டிகப்பட்டது. பிறகு அவரே "மாமா படத்தவச்சுட்டு போ நான் ஜாக்ரதயா ரயில்ல எடுத்து வந்து ஊரில் கொடுக்கிறேன்" என்றது போன்ற செய்திகள் கூறிஇருக்கிறார்.
அண்மையில் மஞ்சையில் சஷ்டிமுடிந்து வேல் பூசைஇடும்பன்பூசைஇவற்றில்கலந்து
இன்றும் இதைப்போன்றதொரு சமுதாய நடைமுறை (அடர்த்தி சற்று தளர்ந்தாலும்) நிலவியே வருகிறது மஞ்சையில் ஏன் 18 கிராமத்திலும். மேலும் தளர்வு ஏற்பட்டுவிடுமோ என்ற நம் போன்றோரின் அச்சம் தேவையற்றதாக வேண்டும் என்பதாலும்
தி.மு வின் சாதனைகளை ஆளுமையை மற்றபெரியவர்கள் இன்னுமதிகமாகவும் சிறப்பாகவும் சொல்லமுடியும்.(அல்லது நம் போன்றவர்கள் திரட்டிக்கொடுக்க முடியும்) என்றாலும் அதற்கிடைப்பட்ட கால இடை வெளியில் ஏதோ இவர்படத்தை கண்டவுடன் இணயத்தில் இணைந்துள்ள இளவர்கள்( நம்மை விட!!!!) இதைப்போன்ற சமுதயநடைமுறை பற்றிய ஆர்வம் இருந்தும் அநுபவம் பெற வாய்ப்பில்லாமல் சிலராவது வெளியே இருக்கக்கூடும் அதற்காகவே அவர்களுக்காகவே தாண்டிவிட்டேன்(முந்திக்கொண்
இது என்னது.,.
அவர் பக்கத்துவீட்டு தம்பி மகனுக்கு ஏற்பட்டதாக (இராம.ச.அரு)சொல்லக்கேட்டது. சஷ்டியின் போது ஊரில் தேர் இன்னும் கொஞ்ச நேரத்தில் புறப்படப்போகிறது இவர் வீட்டை விட்டு வெளியே வந்து வீதியில் நிற்கிறார் பக்கத்தில் இருந்த நம்மவர் கேட்கிறார்
கேள்வி:- ஏம்ப்பா மனி தேர் தெக்கு வீதில வரும்போது சிறமம் ஒன்னும் இருக்காதே தின்னயசாமி மடத்துக்கிட்ட பூங்குலத்துல அருத்துஓடிக்கிடக்குமே மொடசபுடிச்சி இருக்கா? மண்ணுகொட்டியிருக்கா? போய் பாத்துட்டு வந்துடுரேன். அல்லது இப்பத்தான் ஊரிலிருந்து வந்தேன் எனக்கு தெறியலையே (உண்மையும் அதான்) என பதில் இருக்கவேண்டும்
ஆனால்...
பதில்:- செஞ்சிருப்பாங்கண்ணு நினைக்கிறேன்.
பதிலுக்கு நம்மவரின் எதிர் வினை:-- "ஓகோ" நெனக்கிறீங்களோ!!!.
யார் பெரியவர்? இவர் தான்.
தி.முத்துக்குமரசாமி முதலியார்.
Wednesday, July 6, 2011
நகரத்திலிருக்கும் நாம் சொந்த கிராமத்திற்கு இல்லாவிட்டால் சொந்தங்களின் கிராமதிற்கு சென்று வரவிரும்ப வேண்டும் கொஞ்சம் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம், வித்தியாசமான உணவை சுவைக்கலாம்,சொந்தங்களிடம் பொறணிபேசி பொழுதைக்கழிக்கலாம் இந்த மீடியாக்கலின் பிடியிலிருந்து விடுபட்டதை உணரலாம். டிவி யே பார்தால்கூட அதன் வித்தியாசம் உங்களுக்கு புரியும் வெளியிலிருந்து சப்தம் வந்தால் கூட(union-அதன் பெயருக்கு முரணாக இருப்பதைபோல சப்தமும் இருக்கும் நகரத்தில்) ரேடியோ மத்திய அலைகூட F Mபோலகேட்கும்.(உள் கிராமமாக இருந்தால்)
மக்கள் நகரத்தை நோக்கி செல்கின்றனர் என மேலோட்டமாக இன்று சொல்லப்பட்டாலும் கிரமத்தான்கள் மனதளவில் நகரவாசியாவதற்கே எப்போதும் முயன்றுகொண்ட்டிருக்கிறான் என்பது வேதனை. நமக்குரிய பாரம்பரிய நிகழ்த்து கலை இப்போது மிகக்குறைவு அல்லது இல்லை.இதைப்பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.சிந்திக்கவேண்டும் என்பது நமது ஆசை.
பெரு நகரங்களில்தான் நல்ல இசை கேட்பதற்கான FMGOLD-போன்ற சேனல்களிருக்கிறது . ஊர் புறங்களில் தான் நகரங்களை விட இதுபோன்ற சேனல்கள் அவசியம். நமது அரசை இதில் கவனம் கொள்ளவைக்கவேண்டும். நான் சென்னையிலிருந்த நாட்களில் ஒரு நாள் கூட வானொலியை டியூன் செய்தது இல்லை ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நகழ்ச்சி இருந்துகொண்டே இருக்கும்.வியாபாரரீதியிலான பண்பலைகள் கிராமங்களை சென்றடைவதற்குள் இது நடக்கவேண்டும் என்பது நமது ஆசை.
ஆதி கால மனிதன் குகைக்குள் வசித்தான் எதற்கு இயற்கையின் அதீத சீற்றத்திற்கு பயந்தோ!! இன்று நாம் குகை போன்ற வசிப்பிடத்தில் இருக்கிறோம் எதற்கு இயற்கைக்கு ஆதீதமாக பயந்தோ!.
வெயில்,வெளிச்சம்,காற்று,மழை, இவற்றை மறைத்து பெட்டி போன்ற இருப்பிடத்தில் வசிக்கிறோம் அளவில் சொல்லவில்லை அமைப்பில். வெளிச்சத்தை மறைத்து பகலிலும் லைட்டை எறியவிட்டு.வெளிக்காற்றை மறைத்து ஃபேனை சுழலவிட்டு உள் காற்றை தேடிக்கொண்டு, வீட்டினுள் குப்பை ,நீர் சுத்தமாக நீக்கி வெளியே தேக்கி அதிலுற்பத்தியாகும் கொசுவிற்கு பயந்து இருக்கும் ஒன்றிரண்டு சன்னல்களிலும் நெட்லான் அடித்து HIT அடித்து BAT எடுத்து கொசுவுடன் டென்னிஸ் விளையாடி Good Night சொல்லி தூங்க போகிறோம். அல்லது AC போட்டு தூங்கி எழுந்து CNN NDTV வைத்து குளோபல் வா(ர்)மிங் கவர் ஸ்டோரி பார்க்கின்றோம்.
தற்போதய குடியிறுப்பின் அடிப்படை அமைப்பு முக்கால்வாசி இடங்களில் எதிரொலியுடனே இருக்கும்.பொறியாளரைக் கேளுங்கள் லாப்டில் சாமான்களைப்போடுங்கள் என்று சமாளிக்க சொல்லுவார். பழைய அமைப்பில் இது அதிகமில்லை(தெறிந்தோதெறியாமலோ).
செவ்வியலிசையை கேளுங்கள் பயிற்சி தேவைதான் பரவாயில்லை.புரியாதுதான் புரிவதுபோல் நடியுங்கள்,ஆர்வம் இருக்காதுதான் இருப்பதாக காட்டிக்கொள்ளுங்கள் கொஞ்ச நாட்களில் தேவையான அளவு கிடைத்து விடும் என்ன மினிமல் பொருமை வேண்டும் அதுதான் நம்மிடையே அறிதான ஒன்று. அது நம்மிடையே வேண்டுமென்பதொரு ஆசை.
பேருந்துகளில் "கலர் வீடியோகோச்" என்பது கூடுதல் ஈர்ப்பாக இருந்தது தற்போது பலருக்கு தவிர்க்க வேண்டிய ஒன்றாக படுகிறது. இந்த"பப்ளிக் பிராட்காஸ்டிங்" சில காலங்களில் ஒழிந்துவிடும். ஒவ்வொரு பயனியும் தத்தமது சாதன ங்களில் தத்தமது ரசனைக்குறிய மெட்டீரியல்களை எடுத்து வந்துவிடுவர் குடி நீர்,உணவு போல கையுடன். என்ன ஹட் போன் போன்ற சாதனங்களை(அடுத்தவர்க்கு இடஞ்சலில்லாமல்) உபயோகிக்கவேண்டுமென்பது ஒர் ஆசை.
இ ந்த ஒலி ஒளி அமைப்பு, இன்று நடக்கும் ஆர்கெஸ்ட்ராக்களில் கலைஞ்சர்கள் நல்ல ஒலி அமைப்பு முறை பற்றி தெறிந்திருந்தும் எனோ செய்வார் இல்லை.குளத்திற்கு அருகில் மேடை அமைந்தால் அன்று நிகழ்ச்சியே நன்றாக இருக்கும் என பேசிக்கொள்ளும் சிலரை பார்த்ததுண்டு.
இன்று டென்ட் கொட்டகை எப்படியிருக்கிறது தெறியவில்லை காலைத்தூக்கி சீட்டில் வைத்துக்கொண்டு ( எப்போதாவதுகீழே ஓடும் நாய்க்காக)படம் பார்த்தாலும் அதன் காற்றோட்டமும் தெளிவான ஒலியமைப்பும் நன்றாக இருக்கும்.
ஆடியோவில் எத்தனையோ தொழில் நுட்பங்கள் பல கேட்ஜெட்கள் வெட்ஜெட்கள் ஸ்டீரியோ டால்பி எம்பிதிரி எம்பிபோர் குச்சிகள் இவையத்தனையும் இயல்பிலிருக்கும் ஒலித்துல்லியத்தைதான் அடைய முயலுகின்றனவென்பதை நாம் உணறவேண்டும். கலைஞ்சர்களே கூட அதில் அசட்டையாக இருப்பதாக தோன்றுகிறது. நாதஸ்வரம்கூட எல்லா இடங்களிலும் நேரங்களிலும் ஒலிபெருக்கியுடன் இருக்கவேண்டுமா?. அப்படியிருந்தாலும் நம் மாக்கள்(எழுத்துப்பிழையில்லை) பலர் இவர்களினிசயை தங்களின் பிசியான மூளைக்குள் நுழைத்து மனதிற்குள் செலுத்திவிடப்போகிறார்களா என்ன. சக கலைஞ்சர்களுடனும் வேலையற்ற(பிசி) சிலருடனும் தானே பகிர்ந்து கொள்கிறீர்கள் எதற்கு அந்த தரமற்ற ஒலிபெருக்கி.
திருப்பூரில் கிருஷ்னா ஸ்வீட் ஆதரவில் மாதம் ஒருமுறை கச்சேரி நடக்கிறது.அந்த சற்றே பரபரப்பான கோவிலில் சுமாரான ஒலி அமைப்பில் மேலும்சுமாரான எண்ணிக்கையில் உள்ள ரசிகர்களுக்கு வந்து பாடும் பாடகர்களையும் நடத்தும் சபா&ஸ்பான்ஸரை போற்றவேண்டும்.சூழ் நிலைத்தொல்லை, அங்கு வந்து இருக்கும் சுத்த ஆன்மீகர்களின்(கலைகளில்கூட நாட்டம்காட்டாத) சலசல பேச்சுக்கிடடையே அந்நிகழ்வு ஏன் அங்குதான் நடக்கவேண்டுமா? ஸ்பான்சர் ஆன்மிகத்துடன் இணைந்தே நிகழ்ச்சி நடக்க வேண்டுகிறார் சரி வேறு சிறியகோவிலில் ஏன் நடத்தக்கூடாது ? ( குறைவாகவே ரசிகர் வருவதால் மைக் இல்லாமலே கூட).
un adulterated music என்பதே கிடைக்காதவொன்றாகிவிட்டது கொடுமை என்னவென்றால் இருக்கும் ஒன்றிரண்டு நல்ல அமைப்புகளின் சிறப்பை உணராதிருப்பதுதான். இயந்திர மனிஅமைப்பதில் இருக்கும் பெருமை கோவில்களில் நாதஸ்வரம் தவில் கலைஞ்சர்களை தக்கவைத்துக்கொள்வதில் இல்லாது போனதுதான். இன்று ஒதுவார்களே இல்லாத பெருமை மிகுகோவில்களெத்தனையோ.
திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகளை உருவாக்கிய ஊர் கோவிலில்இன்று அர்த்தசாம பூசையின்போது பாருங்கள் (அமெச்சூர்) பாடக பக்தர்கள் அமர்ந்து திருமுறை பாடல்களை இசை!!த்துக்கொண்டிருப்பதை காண்பீர்கள் அவர்கள் பக்தியை குறைத்துக் கூறவில்லை அப்பெருமை மிக்க இடத்தில் கூட அவர்களுக்கு பாரம்பரிய பண் முறை அடிக்கடி காதுகளுக்குள் விழவில்லை அவர்கள் மனதில் பதியுமளவுக்கு அதனால் பாட்டில் பிரதிபலிக்கவில்லை.அருகிலிருந்த அன்பர் அன்புடன் செய்யும் எச்செயலையும் ஆண்டவன் ஏற்றுக்ககொள்வார் என்றார்"கோழை மிடறாக" என்ற திருமுறையைச்சமாதானமாக சொல்லி.
இயந்திரமனியிசையும் எலக்டிரானிக் மந்திர உச்சாடனமும் அவருக்கு தேவையில்லை நாம்தான் ஒடிக்கொண்டிருக்கிறோம் இழப்பையறியாது..என்னத்த கன்னையா போல " பெரிய தேசிங்கு ராசா ஒடுராறு திரும்பி வருவாறு" என அந்த தோடுடையசெவியன்(இரு காதிலும் காந்தர்வர்கள் இசைக்க) அமர் ந்திருக்கிறார். திரும்ப வரவேண்டும் என்பதே நமது ஆசை.
மக்கள் நகரத்தை நோக்கி செல்கின்றனர் என மேலோட்டமாக இன்று சொல்லப்பட்டாலும் கிரமத்தான்கள் மனதளவில் நகரவாசியாவதற்கே எப்போதும் முயன்றுகொண்ட்டிருக்கிறான் என்பது வேதனை. நமக்குரிய பாரம்பரிய நிகழ்த்து கலை இப்போது மிகக்குறைவு அல்லது இல்லை.இதைப்பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.சிந்திக்கவேண்டும் என்பது நமது ஆசை.
பெரு நகரங்களில்தான் நல்ல இசை கேட்பதற்கான FMGOLD-போன்ற சேனல்களிருக்கிறது . ஊர் புறங்களில் தான் நகரங்களை விட இதுபோன்ற சேனல்கள் அவசியம். நமது அரசை இதில் கவனம் கொள்ளவைக்கவேண்டும். நான் சென்னையிலிருந்த நாட்களில் ஒரு நாள் கூட வானொலியை டியூன் செய்தது இல்லை ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நகழ்ச்சி இருந்துகொண்டே இருக்கும்.வியாபாரரீதியிலான பண்பலைகள் கிராமங்களை சென்றடைவதற்குள் இது நடக்கவேண்டும் என்பது நமது ஆசை.
ஆதி கால மனிதன் குகைக்குள் வசித்தான் எதற்கு இயற்கையின் அதீத சீற்றத்திற்கு பயந்தோ!! இன்று நாம் குகை போன்ற வசிப்பிடத்தில் இருக்கிறோம் எதற்கு இயற்கைக்கு ஆதீதமாக பயந்தோ!.
வெயில்,வெளிச்சம்,காற்று,மழை,
தற்போதய குடியிறுப்பின் அடிப்படை அமைப்பு முக்கால்வாசி இடங்களில் எதிரொலியுடனே இருக்கும்.பொறியாளரைக் கேளுங்கள் லாப்டில் சாமான்களைப்போடுங்கள் என்று சமாளிக்க சொல்லுவார். பழைய அமைப்பில் இது அதிகமில்லை(தெறிந்தோதெறியாமலோ).
செவ்வியலிசையை கேளுங்கள் பயிற்சி தேவைதான் பரவாயில்லை.புரியாதுதான் புரிவதுபோல் நடியுங்கள்,ஆர்வம் இருக்காதுதான் இருப்பதாக காட்டிக்கொள்ளுங்கள் கொஞ்ச நாட்களில் தேவையான அளவு கிடைத்து விடும் என்ன மினிமல் பொருமை வேண்டும் அதுதான் நம்மிடையே அறிதான ஒன்று. அது நம்மிடையே வேண்டுமென்பதொரு ஆசை.
பேருந்துகளில் "கலர் வீடியோகோச்" என்பது கூடுதல் ஈர்ப்பாக இருந்தது தற்போது பலருக்கு தவிர்க்க வேண்டிய ஒன்றாக படுகிறது. இந்த"பப்ளிக் பிராட்காஸ்டிங்" சில காலங்களில் ஒழிந்துவிடும். ஒவ்வொரு பயனியும் தத்தமது சாதன ங்களில் தத்தமது ரசனைக்குறிய மெட்டீரியல்களை எடுத்து வந்துவிடுவர் குடி நீர்,உணவு போல கையுடன். என்ன ஹட் போன் போன்ற சாதனங்களை(அடுத்தவர்க்கு இடஞ்சலில்லாமல்) உபயோகிக்கவேண்டுமென்பது ஒர் ஆசை.
இ ந்த ஒலி ஒளி அமைப்பு, இன்று நடக்கும் ஆர்கெஸ்ட்ராக்களில் கலைஞ்சர்கள் நல்ல ஒலி அமைப்பு முறை பற்றி தெறிந்திருந்தும் எனோ செய்வார் இல்லை.குளத்திற்கு அருகில் மேடை அமைந்தால் அன்று நிகழ்ச்சியே நன்றாக இருக்கும் என பேசிக்கொள்ளும் சிலரை பார்த்ததுண்டு.
இன்று டென்ட் கொட்டகை எப்படியிருக்கிறது தெறியவில்லை காலைத்தூக்கி சீட்டில் வைத்துக்கொண்டு ( எப்போதாவதுகீழே ஓடும் நாய்க்காக)படம் பார்த்தாலும் அதன் காற்றோட்டமும் தெளிவான ஒலியமைப்பும் நன்றாக இருக்கும்.
ஆடியோவில் எத்தனையோ தொழில் நுட்பங்கள் பல கேட்ஜெட்கள் வெட்ஜெட்கள் ஸ்டீரியோ டால்பி எம்பிதிரி எம்பிபோர் குச்சிகள் இவையத்தனையும் இயல்பிலிருக்கும் ஒலித்துல்லியத்தைதான் அடைய முயலுகின்றனவென்பதை நாம் உணறவேண்டும். கலைஞ்சர்களே கூட அதில் அசட்டையாக இருப்பதாக தோன்றுகிறது. நாதஸ்வரம்கூட எல்லா இடங்களிலும் நேரங்களிலும் ஒலிபெருக்கியுடன் இருக்கவேண்டுமா?. அப்படியிருந்தாலும் நம் மாக்கள்(எழுத்துப்பிழையில்லை) பலர் இவர்களினிசயை தங்களின் பிசியான மூளைக்குள் நுழைத்து மனதிற்குள் செலுத்திவிடப்போகிறார்களா என்ன. சக கலைஞ்சர்களுடனும் வேலையற்ற(பிசி) சிலருடனும் தானே பகிர்ந்து கொள்கிறீர்கள் எதற்கு அந்த தரமற்ற ஒலிபெருக்கி.
திருப்பூரில் கிருஷ்னா ஸ்வீட் ஆதரவில் மாதம் ஒருமுறை கச்சேரி நடக்கிறது.அந்த சற்றே பரபரப்பான கோவிலில் சுமாரான ஒலி அமைப்பில் மேலும்சுமாரான எண்ணிக்கையில் உள்ள ரசிகர்களுக்கு வந்து பாடும் பாடகர்களையும் நடத்தும் சபா&ஸ்பான்ஸரை போற்றவேண்டும்.சூழ் நிலைத்தொல்லை, அங்கு வந்து இருக்கும் சுத்த ஆன்மீகர்களின்(கலைகளில்கூட நாட்டம்காட்டாத) சலசல பேச்சுக்கிடடையே அந்நிகழ்வு ஏன் அங்குதான் நடக்கவேண்டுமா? ஸ்பான்சர் ஆன்மிகத்துடன் இணைந்தே நிகழ்ச்சி நடக்க வேண்டுகிறார் சரி வேறு சிறியகோவிலில் ஏன் நடத்தக்கூடாது ? ( குறைவாகவே ரசிகர் வருவதால் மைக் இல்லாமலே கூட).
un adulterated music என்பதே கிடைக்காதவொன்றாகிவிட்டது கொடுமை என்னவென்றால் இருக்கும் ஒன்றிரண்டு நல்ல அமைப்புகளின் சிறப்பை உணராதிருப்பதுதான். இயந்திர மனிஅமைப்பதில் இருக்கும் பெருமை கோவில்களில் நாதஸ்வரம் தவில் கலைஞ்சர்களை தக்கவைத்துக்கொள்வதில் இல்லாது போனதுதான். இன்று ஒதுவார்களே இல்லாத பெருமை மிகுகோவில்களெத்தனையோ.
திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகளை உருவாக்கிய ஊர் கோவிலில்இன்று அர்த்தசாம பூசையின்போது பாருங்கள் (அமெச்சூர்) பாடக பக்தர்கள் அமர்ந்து திருமுறை பாடல்களை இசை!!த்துக்கொண்டிருப்பதை காண்பீர்கள் அவர்கள் பக்தியை குறைத்துக் கூறவில்லை அப்பெருமை மிக்க இடத்தில் கூட அவர்களுக்கு பாரம்பரிய பண் முறை அடிக்கடி காதுகளுக்குள் விழவில்லை அவர்கள் மனதில் பதியுமளவுக்கு அதனால் பாட்டில் பிரதிபலிக்கவில்லை.அருகிலிருந்த அன்பர் அன்புடன் செய்யும் எச்செயலையும் ஆண்டவன் ஏற்றுக்ககொள்வார் என்றார்"கோழை மிடறாக" என்ற திருமுறையைச்சமாதானமாக சொல்லி.
இயந்திரமனியிசையும் எலக்டிரானிக் மந்திர உச்சாடனமும் அவருக்கு தேவையில்லை நாம்தான் ஒடிக்கொண்டிருக்கிறோம் இழப்பையறியாது..என்னத்த கன்னையா போல " பெரிய தேசிங்கு ராசா ஒடுராறு திரும்பி வருவாறு" என அந்த தோடுடையசெவியன்(இரு காதிலும் காந்தர்வர்கள் இசைக்க) அமர் ந்திருக்கிறார். திரும்ப வரவேண்டும் என்பதே நமது ஆசை.
Wednesday, June 29, 2011
ஓசை ஆசை
அவர் தான் சமீபத்தில் தங்கி வந்த ரிசாட்டை பற்றி எங்கள் ஊர்(மஞ்சை) திரு விழாவின்போது தன் நண்பரிடம் பிரஸ்தாபித்துக்ககொண்டிருந்தார்
. வெளி உலகத்தொடர்பே மிக அரிதாக இருக்கும் அந்த இடத்தின் தன்மை,அதன் சூழ் நிலை தன்னை போன்றவர்களுக்கு கொடுக்கும் Relaxation பற்றியும் கூறினார்.
அந்த N R V (non resident villager) நண்பரிடம் தன் காமிரா அலைபேசியை கொடுத்து அதில் படம் எடுக்க முயலச்சொல்ல அவரும் முயன்றுகொண்டிருந்தார். இவர் அங்கே டிவி கிடையாது,போன் கிடையாது, நெட் கிட் எதுவும் கிடையாது என சொல்ல அருகில் நின்ற நான் அட நம்ம ஊரில் நம்ம வீட்டில் இருப்பதை போல இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டேன். அவர் தன் அலைபேசியில் கோவிலுக்கு வெளியே நின்று பேசிய போது "பிலிம்" காட்டுவதாகக் கூட நினைத்தேன். ஆனால் அடுத்த ஆண்டு திருவிழாவின் போது கடை நிலை சேவார்த்தி கூட கடவுளை தன் கைபேசியில் அடைக்க முயலுவது எங்கும் காணக்கிடைத்தது ஓர் ஆண்டில் என்ன அசுரத்தனமான மாற்றம் அல்லது வளர்சிதை மாற்றம்.
இந்த வேகம்தான் ஓசை,அல்லோசை( நல்லோசையில்லா)யின் தாக்கத்தை பற்றி நம்மை கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. ஒலி மாசுபாடும் ஓர் முக்கிய பிரச்சனை! ஆமால்ல.
வீட்டில் ஃபேன் சத்தம்,24 மணி நேரத்தில் குறைந்தது10மணிநேரமாவது ஒளி ஒலிரும் தொலைகாட்சி, நகரமாக இருந்தால் சக பெட்டியின் (நெருக்கத்திலிருக்கும்) ஒலிக்கூட்டமைப்பு(union or association),தெருவில் இருந்து வரும் மோட்டார் வாகன துறிதகதியோசை இடைக்கிடைக்கேட்கும் அதன் காற்று ஒலிப்பான்(high light-டாக),பக்கத்து வீட்டுக்காரரின் கட்டிடக்கலை ஆர்வத்தின் விளைவாக பால்கனி குட்டிசுவர் திருத்திஅமைக்க(இருப்பதை உடைக்க) பயன்படுத்தும் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்யோசை எந்திரம்,காய் வண்டிக்காரர் முதல் காரில் செல்வோர்வரை தங்கள் இசையார்வத்தை தனித்துக்கொள்ள tuneசெய்திருக்கும் பன்(பன்பற்ற)பலை ஒலிபரப்பி,பகல் இரவு பாராமல் பேருந்தில் வீடியோ காட்சி அது தீர்ந்தால்(கோளாறு காரணமாக) தொடரும் ஆடியோ நீட்சி,முடிந்ததும் அருகில் இருப்பவரின் அஞ்சு ஸ்பிக்கர் அலைபேசி(சீன)யின் அம்மன் பாடல், திரைக்கொட்டகைக்கு சென்றால் அதன் நாற்றட இசைப்பெருக்கி(மேலதிக இடங்கலில் தரமற்ற),ஆலயத்திற்கு சென்றால் அதுவும் திருவிழாக்காலமாக இருந்துவிட்டால் கூட்டதின் கூச்சலை மிஞ்ச வைக்கப்பட்டுல்ல சவ(ங்கலின்)ப்பெட்டிகளிலிருந்து(ஸ்பிக்கர் பாக்ஸ்) வரும் எக்கோ எபெக்ட் பேரோசை,பிரபல கொவிலென்றால் போகும் வழி நெரி(றி)த்து நிற்கும் கடைகளிலிருந்து கிளம்பும் திரைப்பபின்னணி பாடகி,கர் களின் பக்தி பாடல் முன்னணியோசை, உள்ளே அன்றாடபூசையில் இயந்திரமனியின் சலிப்பூட்டுமோசை,கருவறையுள்ளோ எலக்டிரானிக் எந்திரத்தின் மந்திர உச்சாடனம் இவை எல்லாம் சிலஅல்லது பல எடுத்துக்காட்டு.
சரி என்ன செய்ய? ம் அன்னாஹசாரேவா? என்னாஹசாரே அவரைப்போல போராட போறமா இல்ல அதுக்கு துனையா ராம்தேவ்வா? சோம்தேவ்வா அவரு வரத்தாம்போறாரா? சும்மா வாயப்போட்டுமெல்லத்தான்
மெல்லுவோம் தொடர்ந்து........
![]() |
| ஜீவா |